சொத்து விபரங்களை சமர்ப்பிக்க தயங்கும் அரசியல் வாதிகள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
சொத்து விபரங்களை சமர்ப்பிக்க தயங்கும் அரசியல் வாதிகள்!

சொத்து விபரங்களை கையளிக்க, தயங்கும் அரசியல்வாதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 169 பேர் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை சபாநாயகருக்கு சமர்ப்பிக்க வேண்டிய நிலையில், இதுவரை 69 பேரே தமது விபரங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை பிரதி வருடமும் ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்குள் சபாநாயகருக்கு சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. 

எனினும் இதுவரை 100 எம்.பிக்கள் தமது விபரங்களை கையளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே சபாநாயகரிடம் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிப்பர். 

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை ஜனாதிபதியின் செயலாளரிடமே கையளிப்பர். 

அந்த வகையில் இதுவரை சொத்துக்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்காத பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல்கள், பாராளுமன்ற பிரதானிகளால் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!