யார் இந்த இராமநாதன் அர்ச்சுனா? அவர் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் உண்மைதானா?

#SriLanka #Hospital #Chavakachcheri
Mayoorikka
1 year ago
யார் இந்த இராமநாதன் அர்ச்சுனா? அவர் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் உண்மைதானா?

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்பட்டு பல்வேறு சர்ச்சைகளிற்கு பின்னர் தற்பொழுது இடம்மாற்றம் செய்யப்பட்டு கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளார். 

 வைத்தியர் அர்ச்சுனா தான் பதவியேற்ற காலத்தில் இருந்து நீண்டகாலம் செயற்படாது வந்த பல அபிவிருத்தி வேலைகளினை தான் செய்து முடித்துள்ளதாக சுய தம்பட்டம் அடித்துள்ளார். 

 அத்தோடு இவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டதிலிருந்து அங்கிருக்கும் முறைகேடுகள் தொடர்பில் வெளிப்படுத்தியும் வந்தார். 

 பல வருடங்களாக இயங்காத நிலையில் இருந்த விடுதிகளையும் சத்திரசிகிச்சை கூடங்களையும் மூன்றே நாட்களில் திறந்து வைத்தததாகவும் முகநூலில் கூறியிருந்தார். இந்த நிலையில் தனது கருத்துக்களை காணொளி மூலம் பதிவு செய்து வெளியிட்டு வந்தார். 

images/content-image/2024/07/1720436386.jpg

இதனால் மக்கள் அவர் பக்கம் உள்ள நியாயங்களை கருத்தில் கொண்டு அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதுஎவ்வாறாயினும் மக்கள் ஒரு பக்க நியாயத்தினை மட்டும் கேட்டு அவருக்கு ஆதரவாக உள்ளதாக சில சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர். அவர் வெளியிட்டுள்ள வீடியோ கருத்துக்களை பார்த்து விட்டு அவரின் மறுபக்கத்தை ஆராயாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 உண்மையில் யாரிந்த இராமநாதன் அர்ச்சுனா? இவர் ஏற்கனவே சாவகச்சேரி வைத்தியசாலையில் பணியாற்றி விட்டு சகல வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுடன் குழப்பத்தில் ஈடுபட்டு அதன்காரணமாக வெளியேறியவர்.

 இதனால் மீண்டும் குறித்த வைத்தியசாலைக்கு அதியட்சகராக நியமிக்கப்பட்டு பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு சக வைத்தியர்களை நெருக்கடி நிலைக்கு தள்ளியதாகவும் இவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் இயங்கி வந்த விடுதியை மூன்று நாட்களுக்குள் வசதி அற்ற புதிய கட்டிடத்திற்கு மாற்றி நோயாளர்களை ஆபத்தை விளைவிக்க   கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாகவும், அத்தோடு வைத்தியசாலையின் முன்பகுதியில் இயங்கிய அவசர சிகிச்சை நிலையத்தை வைத்தியசாலையின் பின்பகுதிக்கு மாற்றியதன் மூலம் நோயாளர்களை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

images/content-image/2024/07/1720436457.jpg

 மிகவும் சிரமத்திற்கு மத்தியில் அர்ப்பணிப்போடு சேவையாற்றும் விசேட வைத்தியர்களின் பெயர்களை பொது வெளியில் கேவலமான முறையில் விமர்சித்து அவர்களை சமூகத்திற்கு பிழையானவர்களாக சித்தரித்து விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

 இவ்வாறாக பல குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. எனவே சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மையை ஆராயாமல் வைத்தியர் அர்ச்சுனா கூறும் தகவல்களை வைத்து அவருக்கு சாதகமாக மக்கள் செயற்படுக்கின்றனர்.

images/content-image/2024/07/1720436531.jpg

 இதேவேளை வைத்தியர் அர்ச்சுனா JMO பிரணவனுடன் கதைத்த விதங்களும் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. அவர் தானாகவே தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு அவருக்கு தெரியாமல் அதை ஒலிப்பதிவு செய்து, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக அவருக்கு கோபம் ஏற்படுத்தும் விதமாக உரையாடலை தொடர்கின்றார்.

 அத்தோடு ஒரு அதிகாரியை குடித்துவிட்டு பேசுகின்றாயா நிதானமாக தான் இருக்கின்றாயா என கோபமூட்டும் வார்த்தைகளினால் உரையாடுகின்றார். இதன்மூலம் அவரின் மனநல குறைபாடுகள் தொடர்பில் சந்தேகத்தினை எழ வைக்கின்றது. 

 இவர் ஒரு உளவியல் பிரச்சனை உடையவர் எனவும் அவரின் தனிப்பட்ட வாழ்விலும் கூட அவரது உளவியல் பிரச்சனைகள் காரணமாக பிரிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறு இருக்கயில் இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள அநேகமான வைத்தியர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். 

இவை தொடர்பாக ஆராய வேண்டியது வட மாகாண சுகாதார திணைக்களத்தின் பாரிய பொறுப்பாகும். இதேவேளை இவரை யாழ்ப்பாணத்திற்கு வேண்டுமென்றே மத்திய சுகாதர அமைச்சு நேரடியாக நியமித்தமையும் சந்தேகங்களை எழ வைக்கின்றது. 

images/content-image/2024/07/1720436601.jpg

சாவகச்சேரி வைத்தியசாலையில் குழப்பத்தினை ஏற்படுத்தி நிர்வாக சீர்கேட்டினை உருவாக்க சிங்கள பேரினவாத  தலைமைகள் முயற்சி செய்திருக்கலாம் எனவும் ஒரு சிலர் கூறுகிறனர். 

 சாவகச்சேரி வைத்தியசாலை முப்பது வருட காலயுத்தத்தில் பாதிப்படைந்து தற்பொழுது புலம்பெயர் தமிழ் மக்களின் நிதி உதவியில் மிகவும் தரமான முறையில் கட்டுமான பணிகள் நடைபெற்று சீராக இயங்கி வருகின்றது. 

அதனை குழப்பும் விதமாக இவ்வாறான செயற்பாடுகள் பேரினவாத்தினால் வேண்டுமென்றே திணிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

 எதுஎவ்வாறாக இருந்தாலும் வைத்தியர் அர்ச்சுனாவின் விடையத்தில் ஊடகங்கள் ஒரு பக்க கருத்தினை கேட்டுவிட்டு வழமைபோல் வெறும் பரபரப்பிற்காக செய்திகளை தொடர்ந்தும் பிரசுரிக்கின்றனர். அதை விடுத்து இந்த கருத்துக்களை புலனாய்வு செய்து அதன் உண்மைத் தன்மைகளை வெளியிடுவதற்கு இதுவரை யாரும் முன்வரவிலை.

                               எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

                                           எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக்                                                                         கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும். 

 என்ற வள்ளுவரின் குறளிற்கு அமைய ஆராய்ந்து உண்மைகளை வெளியிட வேண்டும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!