மீண்டும் அதிபர்கள், ஆசிரியர்கள் சுகவீன விடுமுறை போராட்டம்!
#SriLanka
#Sri Lanka Teachers
#strike
Mayoorikka
1 year ago

அரச சேவையில் பணியாற்றும் பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் எதிர்வரும் 09ஆம் திகதி சுகவீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



