முற்றாக முடங்கியது சாவகச்சேரி நகர்: கடைகளை அடைத்து மக்கள் போராட்டம்
#SriLanka
#Protest
#Hospital
#Chavakachcheri
Mayoorikka
1 year ago

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமும் கடை அடைப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை பதவி நீக்கம் செய்து, கைது செய்ய முயற்சிப்பதாக நேற்றிரவு வெளியான தகவலை அடுத்து, பொதுமக்கள் வைத்தியசாலை வளாகத்தில் கூடிய நிலையில், நேற்று நள்ளிரவு அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
இந்த நிலையில், அதிகாலை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் வர்த்தகர்கள் கடைகளை முழுவதுமாக பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சாவகச்சேரி நகர் முற்றாக முடக்கமடைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.



