மீன் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுவன்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
மித்தெனிய விக்கிரம மாவத்தை கிழக்கு பகுதியில் மீன் தொட்டியில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மித்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் 03 வயதுடைய குழந்தையே உயிரிழந்துள்ளது. வீட்டின் முன் செல்ல மீன் வளர்ப்பதற்காக கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.