ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனு விசாரணைக்கு வருகிறது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பாக உச்ச நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு இன்று (08.07) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த மனு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது. இந்த மனுவை பரிசீலிப்பதற்காக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ்.துரைராஜா ஆகிய ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு அண்மையில் பெயரிடப்பட்டது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் திகதிகள் தொடர்பில் உச்ச நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை தற்போது திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.