இரு தினங்கள் பாடசாலை மூடப்படுமா? கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர அறிவிப்பு
#SriLanka
#School
#Ministry of Education
#leave
Mayoorikka
1 year ago

அரச சேவையில் பணியாற்றும் பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் 08, 09ஆம் திகதிகளில் சுகவீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எனினும், பாடசாலைகள் வழமை போல் நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.



