வைத்தியர் அர்ச்சுனாவை கைது செய்ய சாவகச்சேரி வைத்தியசாலையில் குவிந்த காவல்துறை
#Jaffna
#Arrest
#Police
#Hospital
#doctor
Prasu
1 year ago

யாழ்ப்பாணம்,சாவகச்சேரி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய வைத்தியசாலை வளாகத்திற்கு காவல்துறையினர் குவிந்துள்ளதாக அர்ச்சுனா அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் தான் மட்டுமே வைத்தியசாலையில் கடமையில் இருப்பதால் தன்னை கைது செய்து அழைத்துச் சென்றால், அந்த சமயத்தில் வைத்தியசாலையில் எதாவது உயிரிழப்பு ஏற்பட்டால் தானே பொறுப்பு என அர்ச்சுனா அவர்கள் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள போதும், அவர் அங்கிருந்து வெளியேற மறுப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரை கைது செய்ய காவல் துறையினர் குவிந்துள்ளதால் வைத்தியசாலை வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.



