காஸாவில் பாடசாலையை குறிவைத்து தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : 16 பேர் பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
காஸா பகுதியில் உள்ள பாடசாலை மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அகதிகள் முகாமில் உள்ள பள்ளியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த பள்ளியில் சுமார் 7,000 பேர் தங்கியிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதச் செயற்பாடுகள் அதிகம் உள்ள பிரதேசத்தை நோக்கியே இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறுகின்றனர்.