அரச துறையினருக்கு சம்பளத்தை அதிகரிக்க முடியாது : ஜனாதிபதி திட்டவட்டம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
அரச துறையில் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் அதனை செய்ய முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஊவா மாகாண சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுக்கு அதிகாரமளிக்கும் நிகழ்வில் இன்று (06.07) வெல்லவயில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக சம்பளத்தை அதிகரிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.