இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்து!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பதுளையில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று ஹல்பே பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்து சாலையை விட்டு விலகி அருகில் இருந்த ஹோட்டல் சுவரில் மோதியது. பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் தெமோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 04 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்



