தேசிய அரசாங்கத்திற்கு இடமில்லை: மொட்டு உறுதி
#SriLanka
#SLPP
Mayoorikka
1 year ago
தேசிய அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முற்படுவாராயின் அதற்கு ஒத்துழைப்பு வழங்காதிருக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி திட்டமிட்டுள்ளது.
தேசிய மட்டத்திலான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறானதொரு நகர்வுக்கு ஒத்துழைத்தால் அது கட்சிக்கு மேலும் பின்னடைவாக அமையக்கூடும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தேசிய அரசமைக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.