இன்று முதல் 17 நாட்களுக்கு மதுபான சாலைகள் மூடப்படும்!

#SriLanka #liquor
Mayoorikka
1 year ago
இன்று முதல் 17 நாட்களுக்கு மதுபான சாலைகள் மூடப்படும்!

கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த மஹோற்சவ விழா இன்று (06) கொடியேற்றத்துடன் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 இந்த வருடாந்த மஹோற்சவ விழாவை கண்டுகளிக்க, நாட்டில் பல பாகங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் தரிசனத்துக்காக படையெடுத்து வருவது வழமையாகும்.

 அதேநேரத்தில் கதிர்காமத்துக்கு தரிசனத்துக்காக வருகை தரும் அடியார்களின் நன்மை கருதி அவர்களுக்கான பாதுகாப்பு, போக்குவரத்து, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான எசல பண்டிகையை முன்னிட்டு கதிர்காம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அனைத்து மதுபான விற்பணை நிலையங்களும் இன்று (06) ஆம் திகதி முதல் எதிர்வரும் (22)ஆம் திகதி வரை 17 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!