மன்னாரில் முன்னாள் போராளி மர்ம மரணம்!

#SriLanka #Mannar
Mayoorikka
1 year ago
மன்னாரில் முன்னாள் போராளி மர்ம மரணம்!

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

 குறித்த சம்பவம் நேற்று (5) வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம் பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பல் துறை ஆளுமை மிக்க ' கம்பிகளின் மொழி பிறேம் 'என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம் குமார்(வயது-42) என்ற குடும்பஸ்தரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

 நேற்று வெள்ளிக்கிழமை இரவு அடம்பன் வீதியில் உள்ள தனது வீட்டிற்கு முன் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். இதன் போது தன்னை வாகனத்தால் மோதி விட்டுச் சென்று விட்டனர் என சத்தம் போட்டுள்ளார்.

 இதன் போது குடும்பத்தினரின் உதவியுடன் உடனடியாக அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சடல பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என தெரிவிக்கப்படுகின்றது. ' 

கம்பிகளின் மொழி பிறேம் ' என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம்குமார் முன்னாள் போராளியாவார்.ஒரு கால் மற்றும் ஒரு கையையும் இழந்த அவர் இவர் பல் துறை சார் ஆளுமை மிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!