பெர்பச்சுவல் ட்ரஷரீஸ் லிமிடெட் மீதான இடைநிறுத்தத்தை நீட்டிக்கும் மத்திய வங்கி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
பெர்பச்சுவல் ட்ரஷரீஸ் லிமிடெட் மீதான இடைநிறுத்தத்தை நீட்டிக்கும் மத்திய வங்கி!

சர்ச்சைக்குரிய முதன்மை டீலர் பெர்பச்சுவல் ட்ரஷரீஸ் லிமிடெட் மீதான இடைநிறுத்தத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு தொடர மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. 

மத்திய வங்கி 2017 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் திகதி பெர்பச்சுவல் ட்ரஷரீஸின் வர்த்தகத்தை முதன்முதலில் இடைநிறுத்தியது, அதன் பின்னர், தற்போது வரை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் இடைநிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு அரசாங்கப் பத்திர விற்பனையில் சாத்தியமான முறைகேடுகள் குறித்த விசாரணையின் மையத்தில் பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் உள்ளது.

இலங்கை மத்திய வங்கி, பதிவுசெய்யப்பட்ட பங்கு மற்றும் பத்திரங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்ளுர் திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் செயற்பட்டு, பெர்பச்சுவல் ட்ரஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் வர்த்தக இடைநிறுத்தத்தை நீடிக்கத் தீர்மானித்துள்ளது. 

அதன்படி, ஜூலை 5, 2024 அன்று மாலை 4:30 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மேலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முதன்மை வியாபாரியின் வணிகம் மற்றும் செயல்பாடுகளை பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை தொடர்வதற்காகவே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!