திருகோணமலையை வந்தடைந்த சம்பந்தனின் பூதவுடல்! மக்கள் அஞ்சலி

#SriLanka #R. Sampanthan #Trincomalee
Mayoorikka
1 year ago
திருகோணமலையை வந்தடைந்த சம்பந்தனின் பூதவுடல்! மக்கள் அஞ்சலி

மறைந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு இன்று காலை விமானம் மூலமாக கொண்டுவரப்பட்டது.

 தமிழ் அரசு கட்சியின் திருக்கோணமலை மாவட்ட கிளைத் தலைவர், கதிரவேலு சண்முகம் குகதாசன், இரா.சம்பந்தனின் மகன் சஞ்சீவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சீனக்குடா விமான நிலையத்தில் காத்திருந்து சம்பந்தனின் பூதவுடலை பொறுப்பேற்றனர்.

 இதனையடுத்து சம்மந்தனின் பூதவுடல் திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்துக்கு வாகனம் மூலமாக அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், இறுதிக் கிரியைகள் ஞாயிறன்று (07) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!