யுக்திய நடவடிக்கை - 1403 சந்தேகநபர்கள் கைது
#SriLanka
#Arrest
#Police
#drugs
#search
Prasu
1 year ago

“யுக்திய” நடவடிக்கையின் 2 ஆம் கட்ட நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 1403 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 57 பேர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
1.086 கிலோகிராம் ஹெரோயின், 782.7 கிராம் ஐஸ், 3.74 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



