கிளிநொச்சியில் பத்துப் பேர் பொலிஸாரினால் கைது!
#SriLanka
#Arrest
#Kilinochchi
Mayoorikka
1 year ago

யுக்திய சுற்றிவளைப்புக்களில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள கல்லாறு பகுதியில் இன்று (05) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
இன் நடவடிக்கையில் பொலிஸார் இராணுவத்தினர் சிறப்பு அதிரடிபடையினர் இணைந்து மேற்கொண்டனர். இதன்போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் போது ஜஸ் போதைப்பொருள், மோட்டார் சயிக்கிள் ஒன்று உள்ளிட்டவை மீட்கப்பட்டதுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் பொலிஸ் விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



