சம்பந்தனின் பூதவுடலிற்கு தமிழரசுக் கட்சியின் கொடி போர்த்தி அஞ்சலி!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் இராஜயவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து இலங்கை தமிழரசுக் கட்சி தலைமையகமான மாட்டீன் வீதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அங்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா பூதவுடலுக்கு கட்சிக் கொடி போர்த்தி மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நிர்வாகிகள் அரசியல் தலைவர்கள் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர் தொடர்ந்து தந்தை செல்வாவின் கலையரங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அரசியல் கட்சித் தலைவர்கள் மததத்தலைவர்கள், இந்திய துணை துதுவர், வடக்குமாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ், புனித பத்திரிசிரியார் கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் எனப் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.



