மலேசியாவில் ஆட்கடத்தல் கும்பல்களிடமிருந்து 73 பேர் மீட்பு

#Police #people #Malasia #Rescue #Kidnap
Prasu
1 year ago
மலேசியாவில் ஆட்கடத்தல் கும்பல்களிடமிருந்து 73 பேர் மீட்பு

ஆட்கடத்தல் கும்பல்களிடமிருந்து 73 பேரை மீட்டதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜூன் 12ஆம் திகதி மீட்கப்பட்டோரில் குழந்தைகள் 22 பேரும் உடற்குறையுள்ளோர் மூவரும் அடங்குவர்.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட ‘ஆப்ஸ் மெகா பின்டாஸ்’ எனும் அமலாக்க நடவடிக்கையின்போது அவர்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்டோரில் 25 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள், 22 பேர் குழந்தைகள் என்று அரச மலேசியக் காவற்படையின் குற்றவியல் புலனாய்வுப் பிரிவுத் துணை இயக்குநர் ஃபடில் மார்சஸ் கூறினார்.

“பாதிக்கப்பட்டோரில் மலேசியர்கள் மட்டுமன்றி பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, பங்ளாதேஷ், கம்போடியா, மியன்மார், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தோரும் அடங்குவர்,” என்று அரச மலேசியக் காவற்படைத் தலைமையகத்தில் ஜூன் 20ஆம் திகதி செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

மீட்கப்பட்டோரில் உடற்குறையுள்ள மலேசிய மாது ஒருவர் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் பங்ளாதேஷ் நாட்டவர்களான உடற்குறையுள்ள ஆடவர் இருவர் பிச்சை எடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் ஃபடில் மார்சஸ் சொன்னார்.

இல்லப் பணியாளர்கள், ஹோட்டல் ஊழியர்கள், உணவகம், முடிதிருத்தும் கடை போன்றவற்றிலும் பொற்கொல்லர்களிடம் வேலைசெய்தோர் எனப் பலர் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அமலாக்க நடவடிக்கையின்போது, ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 113 பேரைத் தடுத்து வைத்துள்ளதாகத் ஃபடில் தெரிவித்தார். 

அவர்களில் மலேசியர்களும் பங்ளாதேஷ், இந்தோனீசியா, சீனா, தாய்லாந்து நாட்டவர்களும் அடங்குவர் என்றார் அவர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!