கருக்கலைப்புக்கு அனுமதி அளித்த UAE

#government #UAE #Abortion #Legal
Prasu
1 year ago
கருக்கலைப்புக்கு அனுமதி அளித்த UAE

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரக கேபினட் கருக்கலைப்பு அனுமதி அளிப்பது தொடர்பான தீர்மானத்த நிறைவேற்றியுள்ளது. 

இதன்மூலம் இனிமேல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும். 

இஸ்லாமிய நாடானா ஐக்கிய அரபு அமீரகத்தில் இது மிகப்பெரிய சீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இந்த முடிவு பெண்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பமானது ஒரு பெண்ணுடன் அவளது விருப்பத்திற்கு மாறாக, அவளது சம்மதமின்றி அல்லது போதுமான விருப்பமின்றி உடலுறவின் விளைவாக இருந்தால் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும்.

அதேபோல் கர்ப்பத்திற்கு காரணமானவர் அந்த பெண்ணின் திருமணத்திற்கு தகுதியற்ற உறவினர்களில் ஒருவராக இருந்தாலும் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்தரித்து 120 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கருக்கலைப்பு பெண்னின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். 

ஏனெ்னறால் இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தொடர்பாக அரசாணை வெளியிட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!