சாட் நாட்டில் ராணுவ வெடிபொருள் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 9 பேர் பலி
#Death
#BombBlast
#Soldiers
#Military
Prasu
1 year ago
சத் நாட்டின் தலைநகர் ஜமீனாவில் கவுடுஜி மாவட்டத்தில் ராணுவ வெடிபொருள் கிடங்கு ஒன்று உள்ளது.
இந்நிலையில், திடீரென இந்த கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டது. 38 நிமிடங்களுக்கும் கூடுதலாக வெடிபொருட்கள் வெடித்ததில், அருகேயிருந்த கட்டிடங்கள் குலுங்கின.
இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 46 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. எனினும், பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் உதவியுடன் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு அதிபர் மகமத் டெபி இத்னோ பேஸ்புக் வழியே இரங்கல் தெரிவித்து உள்ளார். 1.8 கோடி மக்கள் வசிக்க கூடிய சத் நாட்டில் அரசியல் குழப்ப நிலை நீடித்து வருகிறது.