அமெரிக்காவில் சமூக வலைதள சவாலில் பறிபோன 14 வயது சிறுவனின் உயிர்
#Death
#America
#Food
#Social Media
#Eat
Prasu
1 year ago

அமெரிக்காவில் 14 வயது சிறுவன் அதிக காரத்தை சாப்பிட்டதால் உயிரிழந்துள்ளார். பிரேதப் பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
Harris Wolobah என்ற சிறுவன் சமூக ஊடகத்தில் பிரபலமான ‘One Chip Challenge’ சவாலில் பங்கேற்றபோது காரமான மிளகு சிப்ஸைச் சாப்பிட்டார்.
சவாலில் Paqui என்ற நிறுவனத்தின் சிப்ஸைச் சாப்பிட வேண்டும். சிப்ஸில் காரமான Carolina Reaper, Naga Viper peppers ஆகிய மிளகு வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
மிளகு வகைகளில் காணப்படும் capsaicin எனும் இரசாயனத்தை அதிகளவில் உட்கொண்ட பின் ஹாரிஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
அவரின் இதயம் வழக்கத்தை விட பெரிதாகக் காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சிப்ஸைச் சாப்பிட்ட மற்ற இளையர்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.



