அமெரிக்காவில் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் - நால்வர் பலி
#Death
#America
#Flood
#HeavyRain
#Wind
Prasu
1 year ago
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில், பலத்த புயல் காற்று வீசியது.
இதைத் தொடர்ந்து பெய்த கனமழையால் நகரத்தின் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.
பலத்த காற்று காரணமாக பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் நின்ற மரங்கள் வேறோடு சரிந்தன. புயல் மற்றும் கனமழையால் மின்கம்பங்கள் சரிந்து பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது.
இதனால் நேற்று இரவு சுமார் 9 லட்சம் வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின. இதனிடையே புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புயல் பாதிப்பு காரணமாக ஹூஸ்டன் நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஹூஸ்டன் நகரில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக புயல் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.