வெப்பமான வானிலை குறித்து வடக்கு கிழக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
#SriLanka
#weather
#hot
Mayoorikka
1 year ago
வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் அமுலாகும் வகையில் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கூறிய பகுதிகளில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், 'கவனம்' செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே மேற்படி பிரதேசங்களில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.