மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு!
#SriLanka
#Bank
#Central Bank
Mayoorikka
1 year ago
கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்ததன் பின்னர், இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து இலங்கைக்கு அதிக ஆதரவைப் பெற முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இடம்பெற்ற 'நீடித்து நிலைத்திருக்கும் உறுதிப்பாடு' எனும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'நீடித்து நிலைத்திருக்கும் உறுதிப்பாடு' எனும் உரையாடல் நிகழ்வு நேற்று (09) மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் பல அறிஞர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.