பெண் பொலிஸ் அதிகாரியிடம் பாலியல் துஷ்பிரயோகம் - பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
#SriLanka
#Colombo
#Arrest
#Police
#Women
#Sexual Abuse
Prasu
1 year ago

கொழும்பு கரையோரப் பொலிஸாரின் மகளிர் படைமுகாமிற்கு அத்துமீறி நுழைந்து உறங்கிக்கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மா மாங்குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படைப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



