ரஷ்யா இராணுவத்திற்காக இலங்கையர்கள் கடத்தப்பட்ட விவகாரம் : ஒருவர் கைது!
#SriLanka
#War
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
குருநாகல் வெவரும பிரதேசத்தில் ரஷ்ய இராணுவத்தில் வேலைக்காக இலங்கையர்களை கடத்தியதாக கூறப்படும் மேஜர் ஜெனரல் மற்றும் சார்ஜன்ட் ஒருவரையும் குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது.
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரான இவர் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில், ராணுவ தலைமையகத்தில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளின் பட்டியலை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள கூலிப்படை முகாம்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் கடத்தப்படுவது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.