பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகளை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி 2016 ஆம் ஆண்டு முதல் இவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பிலான முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 8ஆம் திகதியும் தொடரவுள்ளது. 

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் தமது பிரச்சினைகளுக்கு திட்டவட்டமான தீர்வு வழங்கப்படாவிட்டால், வேலைநிறுத்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தி அத்தியாவசிய சேவைகளில் இருந்து விலகிக் கொள்வதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைச் செயலாளர் கே.எல்.டி.ரிச்மண்ட் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!