டயானாவின் வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மான்! இன்று பதவிப் பிரமாணம்

#SriLanka #Parliament
Mayoorikka
1 year ago
டயானாவின் வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மான்! இன்று பதவிப் பிரமாணம்

முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராக இன்று (10) பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார். இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற கூட்டத்தின் பின்னர் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதால் வெற்றிடமான ஐக்கிய மக்கள் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்க கட்சி தீர்மானித்தது.

 எவ்வாறாயினும் டயானா கமகேவிடம் இருந்து வெற்றிடமாகவுள்ள உறுப்பினர் பதவிக்கு பொருத்தமான பெண் ஒருவரை நியமிக்குமாறு இலங்கை மகளிர் பாராளுமன்ற உறுப்பினர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

 இலங்கை மகளிர் பாராளுமன்ற உறுப்பினர் மன்ற தலைவி, பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!