நுகர்வோரின் நலன் காக்க திறந்த டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட வேண்டும் - சம்பிக்க ரணவக்க வலியுறுத்து!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற உணவுப் பொருட்களின் விலைகள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய புதிய இலத்திரனியல் தளமொன்றை உருவாக்குவது தொடர்பான முழுமையான பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக வழிவகைகள் குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
சில அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படவேண்டியிருப்பதால், அதற்கு இந்த திறந்த டிஜிட்டல் தளம் ஒரு நடைமுறை தீர்வாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
இந்த அமைப்பினூடாக நுகர்வோர் இலங்கையில் தாம் கொள்வனவு செய்யும் உணவுப் பொருட்களின் விலை உள்ளிட்ட சகல விபரங்களையும் அறிந்து கொள்ள முடியும் எனவும் திரு பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.



