நெருக்கடி நிலையின் போது காணாமல்போன எரிபொருள் இருப்புகள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
நெருக்கடி நிலையின் போது காணாமல்போன எரிபொருள் இருப்புகள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

நெருக்கடியின் போது எடுக்கப்பட்ட சில எரிபொருள் இருப்புக்கள் பெட்ரோலிய சேமிப்பு முனையங்களில் இருந்து காணாமல் போனதாக எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான துறை கண்காணிப்பு குழுவில் தெரியவந்துள்ளது.

இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இது தெரியவந்ததாக குழுவின் தலைவர்  நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்தார்.

நெருக்கடி நிலையின் போது பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தரவுக் கிடங்குகளில் உள்ள தரவுகள் வேண்டுமென்றே அழிக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளதாக எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் திரு.நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்தார்.

இலங்கைக்கு தேவையான பெருமளவான நிலக்கரியை சுரங்கத் தொழிலாளர்களிடம் இருந்து நேரடியாக இறக்குமதி செய்வதில் இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக  நாலக பண்டார கோட்டேகொட மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!