யாழ்ப்பாணத்தில் இன்று கடும் சோதனை நடவடிக்கை: வீதிகளில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிப்பு
#SriLanka
#Jaffna
#Police
Mayoorikka
1 year ago

யாழில் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்றையதினம்(09) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோனின் ஆலோசனைக்கு அமைவாக போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக 'யுக்திய' சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் ஓர் அங்கமாக யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பிரதேசத்தில் இன்று(09) காலை 'யுக்திய' சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து ஏ9 மற்றும் ஏ32 வீதிகளூடாக பயணித்த வாகனங்களை மறித்து சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.



