அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் கொடுக்கின்றார்கள்: டிரான் அலஸ் ஆதங்கம்

#SriLanka #Minister
Mayoorikka
1 year ago
அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு  அழுத்தம் கொடுக்கின்றார்கள்:  டிரான் அலஸ்  ஆதங்கம்

அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு சிலர் அழுத்தம் கொடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

 போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு பேணும் தரப்பினர் இவ்வாறு அழுத்தம் பிரயோகித்து வருவதாகத் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால் இவ்வாறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

 எனினும் எவ்வளவு அழுத்தங்கள ஏற்படுத்தப்பட்டாலும் பாதாள உலகக் குழுக்களிடமிருந்து நாட்டை மீட்டு எடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகளை விரும்பாதவர்கள் சகல வழிகளிலும் தடை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

 தாம் அண்மையில் வெளியிட்ட கருத்து ஒன்றின் அடிப்படையில் பதவி விலகுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாகத் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!