இலங்கை வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி பதிவு!
#SriLanka
#Srilanka Cricket
Mayoorikka
1 year ago

நடப்பு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக களமிறங்கிய இலங்கை வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் தனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் விளையாடிய அவர், ஆட்டத்தின் முடிவில் தனது முகப்புத்தக பதிவில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். தனது பதிவில் அவர்,
என்னுடைய அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள். நீங்கள் அனைவரும் என் பக்கத்தில் நிற்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஆதரவை நான் என்றும் மறக்க மாட்டேன். இந்த வாய்ப்பை வழங்கிய சன்றைசஸ் அணிக்கு எனது நன்றி.
மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது எல்லையற்ற நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். என பதிவிட்டுள்ளார்.



