வெளிநாடுகளில் இராணுவ வேலை வாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்க வேண்டாம் என கோரிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
வெளிநாடுகளில் இராணுவ வேலை வாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்க வேண்டாம் என கோரிக்கை!

வெளிநாடுகளில் இராணுவ வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

மனித கடத்தல்காரர்கள் குழுவொன்று தற்போது இலங்கை இளைஞர்களை ரஷ்யாவிற்கு இராணுவ சேவைக்கு அனுப்பும் மோசடியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் அறிவித்தல் விடுத்துள்ளார். 

ரஷ்ய ராணுவத்தில் அதிக சம்பளத்தில் வேலை தருவதாக கூறி ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை இதற்காக பணியில் அமர்த்திக் கொண்டு, வக்னர் கூலிப்படையின் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.  

இவர்கள் முன் வரிசைப் பாதுகாப்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பல மாதங்களாக அவர்களுக்கு உரிய சம்பளம் கூட வழங்கப்படவில்லை எனவும் இது தொடர்பான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி எந்தவொரு நபரும் இராணுவ சேவைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட மாட்டார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.  

எனவே சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக எக்காரணம் கொண்டும் செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களிடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!