மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை இதுவரை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முன்மொழிவுகள் மே மாதம் முதலாம் திகதி ஆணைக்குழுவிடம் வழங்கப்படவுள்ளன.
எவ்வாறாயினும், மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய நாளை (10) வரை அந்த காலத்தை நீடிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, நாளையதினம் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.
உரிய முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் மின்கட்டணத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும், மின்கட்டண குறைப்பு வீதத்தை ஜூலை மாதத்தில் அறிவிக்க முடியும் எனவும் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.



