பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் இரு பாடசாலை மாணவர்கள் காலியில் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
காலி பகுதியில் இரு பாடசாலை மாணவர்களின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிடவுள்ளதாக கூறி அச்சுறுத்திய பாடசாலை மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி அக்மீமன பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் இரு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் பாடசாலை மாணவிகளின் அனுமதியை பெறாது அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணை வழங்கி நீதிமன்றம் விடுவித்துள்ளது.