மன்னாரில் உள்ள கோயில்களில் அர்ச்சகர் பற்றாக்குறையை தீர்க்க சிவசேனை நடவடிக்கை

#SriLanka #Mannar #Temple
Mayoorikka
1 year ago
மன்னாரில் உள்ள கோயில்களில் அர்ச்சகர் பற்றாக்குறையை தீர்க்க சிவசேனை நடவடிக்கை

தமிழக அரசு என்னென்ன உதவி செய்யலாம் என முதற்கட்டமாகப் பார்க்கிறோம் எனத் தமிழக அரசின் அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு சேகர்பாபு அவர்கள் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு ஈச்சளவக்கை திரு கார்த்திகேயனிடம் கூறினார்.

 மன்னார் மாவட்டத்தில் திருக்கோயில்களில் அர்ச்சகர் பற்றாக்குறையை ஈடு செய்ய என்னென்ன செய்யலாம் என்பதையும் எடுத்து நோக்குகிறோம் எனத் கார்த்திகேயனிடம் அமைச்சர் கூறினார். சிவ சேனை சார்பில் மன்னார் மாவட்டத்தில் பணிபுரியும் திரு கார்த்திகேயன் சென்னைக்குச் சென்றார். 

மறவன்புலவு க சச்சிதானந்தனின் பதிப்பகச் செயல் முகாமையாளர் கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன் அழைத்துச் செல்ல மாண்புமிகு அமைச்சரை அவரது அலுவலகத்தில் நேற்று மாலை சந்தித்தார்.

 புது தில்லியில் நடைபெற்ற தெற்காசிய வளர்ச்சிக்கான வளர்ச்சிக்கான இளைஞர் பங்களிப்பு மாநாட்டில் சிவ சேனை சார்பில் பங்கேற்ற பின்பு சென்னை வந்த திரு கார்த்திகேயன் அமைச்சரைச் சந்தித்தார்.

 அமைச்சரின் பணிப்புக்கு அமைய நாளை செவ்வாய்க்கிழமை தமிழக அரசின் மூத்த அலுவலர்களை சந்திக்கிறார். மன்னார் மாவட்ட சைவ சமய வளர்ச்சி தொடர்பான தமிழக அரசின் பங்களிப்புக்கான திட்ட அறிக்கைகளைக் கார்த்திகேயன் கொடுக்கிறார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!