வெலிகமவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பெண் : பொலிஸார் தீவிர விசாரணை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
வெலிகமவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பெண் :  பொலிஸார் தீவிர விசாரணை!

வெலிகம, ரஜகல,  பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள வீடொன்றில் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

நேற்று (06) இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடமபெற்றுள்ளது. 

 உயிரிழந்த பெண் தங்கியிருந்த வீட்டுக்குள் இனந்தெரியாத நபர்கள் சிலர் புகுந்து வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

பின்னர், வீட்டில் வைத்து பெண்ணின் கைகால்கள் கட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் 78 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

 உயிரிழந்த பெண் தனது சகோதரி மற்றும் அவரது கணவருடன் வசித்து வருவதுடன், இருவரும் இரவில் சிகிச்சைக்காக வெலிகம நகருக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.  

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!