பிணைமுறி மோசடியை விட பாரதூரமானது விசா பிரச்சனை!

#SriLanka #Sajith Premadasa
Mayoorikka
1 week ago
பிணைமுறி மோசடியை விட பாரதூரமானது விசா பிரச்சனை!

எமது நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த விசா வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்ததன் மூலம், 18.50 டொலர்களை அறவிட்டு, அந்த வருமானம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. 

இதனால், எமது நாட்டுக்கு கிடைக்கும் அதிக அளவிலான டொலர்களில் இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்துவதன் அடிப்படையும், நோக்கமும் என்னவென எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். 

 தரவுகளை மையப்படுத்திய அறிவியல் ரீதியிலான பகுப்பாய்வுகளின் அடிப்படையிலயே இத்தகைய முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். நாட்டிற்கு நன்மை பயப்பதாக இது அமைய வேண்டும். இதன் சாதாக, பாதகங்கள் குறித்தும், நன்மை தீமைகள் குறித்தும் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். 

இது பிணைமுறி மோசடியை விட பாரதூரமான நிதி மோசடி என பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், இது தொடர்பில் உண்மை நிலையை நாடு அறிய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 177 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் பியகம, பொல்லேகல மகா வித்தியாலத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 06 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது, இப்பாடசாலையின் நூலகத்திற்குத் தேவையான ஆங்கில நூல்களை கொள்வனவு செய்வதற்காக ஒரு இலட்சம் ரூபா பணத்தையும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரிடம் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில், ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரன் பிரதீப் ஜயவர்தன அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

 நாட்டை ஆள்பவன் ஒரு தற்காலிக பொறுப்பாளனே. எனவே முட்டாள்தனமான கொள்கைகளில் இருந்து விலகி யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். யாரேனும் நல்லது செய்தால் நல்லது என்று கூற வேண்டும். எதிர்க்கட்சியோ அல்லது வேறு யாரேனும் நாட்டுக்கு நல்லது செய்தால் அதை பாராட்ட வேண்டும். தான் பேசும் விவாதங்களுக்கும் போலவே செயலிலான விவாதங்களுக்கும் தயார். நாட்டுக்கு தேவையான பணிகள், தீர்வுகள், பதில்கள் மற்றும் வேலைத்திட்டங்களை நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழு, தலைவர்கள் எந்த நேரத்திலும் விவாதத்திற்கு தயாராக உள்ளனர். அதுமட்டுமல்லாமல் மூன்றாவது விவாதமாக பேசுவதோடு மாத்திரமல்லாது செயல் ரீதியிலான விவாதத்திற்கும் தாம் தயார் என சஜித் பிரேமதாச தெரிவித்தார். மதுவிலக்கு கொள்கையை கடைபிடிப்பவன் என்ற முறையில் மது, போதைப்பொருள், சிகரெட் என்பவற்றை நான் பகிர்ந்து வரவில்லை. 

எதிர்க்கட்சித் தலைவர் உண்மையைப் பேசுவதால் தான் அதிகமாக சேறு பூசப்படுவதாக தெரிவித்தார். நாட்டை வங்குரோத்து நிலைமையிலிருந்து விடுவித்து, மீண்டும் வங்குரோத்து நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்கான மூலோபாயங்கள் குறித்து யாரும் பேசுவதில்லை. 

தோல்வி கண்ட கம்யூனிஸ, மார்க்சிஸ சித்தாந்தங்களால் எமது நாட்டை கட்டியெழுப்ப முடியாது. தீவிர சோசலிஸவாதிகளின் பிள்ளைகள் கூட பணம் செலுத்தி படிக்கும் தனியார் பாடசாலைகளுக்கே செல்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எந்த சூழ்நிலையிலும் நாம் அரச பாடசாலைகளை தனியார் மயமாக்க மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.