பிரித்தானியாவின் இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் அனுரகுமாரவை சந்தித்தார்
#SriLanka
#Britain
#AnuraKumaraDissanayake
Mayoorikka
1 year ago

இங்கிலாந்து வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லர் நேற்று பிற்பகல் ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார்.
பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இலங்கைத் தலைவர் ஹுமைரா ஹதியா, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக், பிரதம செயலாளர் டொம் சோப்பர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை, பிராந்திய புவிசார் அரசியல் சவால்கள் மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.



