விசா கட்டண விவகாரம்: அரசாங்கம் எடுத்துள்ள விசேட தீர்மானம்

#SriLanka #Visa
Mayoorikka
1 year ago
விசா கட்டண விவகாரம்: அரசாங்கம் எடுத்துள்ள விசேட தீர்மானம்

வெளிநாட்டவர்கள் எமது நாட்டுக்கு வரும்போது 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட 50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் , மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா சேவையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கும் இன்று (6) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 மேலும், வெளிநாட்டவர் ஒருவர் நாட்டிற்குள் நுழையும் போது அதற்கான விசா விநியோகிக்கும் முழுப் பொறுப்பையும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஏற்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!