முதல் முறையாக இலங்கையில் 'AI' செய்தி வாசிப்பாளர்கள்! இலங்கை தொலைக்காட்சியின் தனித்துவ முயற்சி!
#SriLanka
#technology
Mayoorikka
1 year ago
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி இரண்டு செய்தி வாசிப்பாளர்களை செய்தி வாசிக்கச் செய்துள்ளது.
இது உள்ளூர் ஊடகத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபல சிங்கள மொழி செய்தி வாசிப்பாளர்களான சமிந்த குணரத்ன மற்றும் நிஷாதி பண்டாரநாயக்க ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (05) இந்த செய்தி வாசிப்பாளர்களின் அறிமுகம் நடந்துள்ளது.
நாட்டில் சிங்கள மொழியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி செய்தி ஒளிபரப்பப்பட்டது இதுவே முதல் முறையாகும்.