வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாண தமிழருக்கு கிடைத்த உயர் பதவி!

#SriLanka #Jaffna
Mayoorikka
1 week ago
வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாண தமிழருக்கு கிடைத்த உயர் பதவி!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்து தமிழர் ஒருவர் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

 முன்னர் வடக்கு மற்றும் வட மத்திய பிராந்திய சேவைகள் நிலையத்தின் மேலதிக பொது முகாமையாளராக கடமையாற்றிய எந்திரி. திருபாலசிங்கம் பாரதிதாசன் அவர்களே பொது முகாமையாளராக இன்றைய தினம் (06) கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் தனது பதவியினை உத்தியோக பொறுப்பேற்றுள்ளார். 

 எந்திரி. தி. பாரதிதாசன் அவர்கள் 1991 இல் இளங்கலை பொறியியல் (சிவில்) பட்டத்தினை மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திலும் , 1998 இல் கட்டுமான முகாமைத்துவத்தில் முதுமாணிப் பட்டத்தினை மொறட்டுவ பல்கலைக்கழகத்திலும், 2008 இல் நீரியல் மற்றும் நீர் வளங்கள் கற்கைகளில் முதுமாணிப் பட்டத்தினை ; நெதர்லாந்து பல்கலைக்கழகத்திலும் , 2018 இல் வணிக நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தினை இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். 

அத்துடன் இவர் இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் fellowship ஆகவும் உள்ளார். மேலும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் பொறியியளாளராக, பிராந்திய முகாமையாளராக , திட்ட முகாமையாளராக, உதவிப் பொது முகாமையாளராக, திட்டப் பணிப்பாளராக, பிரதிப் பொது முகாமையாளராக , மேலதிக பொது முகாமையாளராக என பல்வேறு பதவிகளை வகித்ததன் ஊடாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் தனக்கென ஒரு தடம் பதித்துக் கொண்டவர். 

தனது 29 வருட சேவையில் பல்வேறு சவால்கள் பிரச்சினைகள் கசப்பான அனுபவங்களைக் கண்டும் சற்றும் தளராது தற்துணிவுடனும் மிகுந்த அர்ப்பணிப்பணிப்புடனும் நேர்மை தவறாது அவர் ஆற்றிய சேவைக்கு கிடைத்த மகத்தான வெற்றியே இப் பொது முகாமையாளர் பதவியாகும். 

 இவர் பெயர்பெற்ற விவசாயக் குடும்பமான சங்குவேலியினைச் சார்ந்த பாலசிங்கம் தங்கம்மா அவர்களின் மூத்த புதல்வன் என்பதும் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையின் வைத்தியர் திருமதி. தயாபரணி பாரதிதாசன் அவர்களின் கணவரும் ஆவார்.