இலங்கையில் இருந்து லண்டன் நோக்கி பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கம்!
#SriLanka
#Flight
Mayoorikka
1 year ago
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் அவசர மருத்துவ உதவி காரணமாக ஆஸ்திரியாவின் வியன்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
தரையிறங்கிய விமானம் மீண்டும் பயணிப்பதில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளது.
தனது பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு காரணமாக தாமதம் ஏற்பட்டதாகக் கூறி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளிடம் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டது.