உலகில் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறு இல்லை: இது அரசாங்கத்தின் புரட்சிகரமான நடவடிக்கை: ஜனாதிபதி
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
Mayoorikka
1 year ago

உறுமய" திட்டத்தின் கீழ் மகாவலி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு, இன்று பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து சிறப்பித்தார். இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “மக்களுக்கு காணி உரிமையை வழங்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை புரட்சிகரமானதாகும்.
இதுவரை உலகில் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவில்லை” என கருத்து தெரிவித்தார்.



