மத்திய பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள லெய்ட் மாகாணத்தில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் கடலோர நகரமான துலாக்கில் இருந்து தென்கிழக்கே 32 கிலோமீட்டர் தொலைவில் 8 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று (03) மாலை 6.16 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின்னர் பல அதிர்வுகள் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸின் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லேய்ட் மாகாணத்தின் சில பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.