ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் இன்று திறக்கப்படும்!
#SriLanka
Mayoorikka
1 year ago

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் இன்று திறக்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்தி தெரிவித்துள்ளார்.
இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரர்களில் சிலர் இதுவரை தமது தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சில பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை எனவும் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க, கொழும்பு, காலி, குருநாகல், நுவரெலியா, வவுனியா, மட்டக்களப்பு ஆகிய மாவட்ட அலுவலகங்களை இன்று திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்தி தெரிவித்துள்ளார்.



