அதிக கவனம் பெறும் மட்டத்திற்கு உயரும் வெப்பநிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 weeks ago
அதிக கவனம் பெறும் மட்டத்திற்கு உயரும் வெப்பநிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின்படி, நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை இன்று (04.05) மேலும் "அதிக அவதானம்" செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் "அதிக கவனத்தை ஈர்க்கும  மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும், மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டெண்  கவனம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதிக கவனம் என்று குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் நீர்ச்சத்து குறைபாடு, நீரிழப்பு காரணமாக உஷ்ணப் பிடிப்புகள் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வெப்பச் சோர்வு போன்றவற்றை அனுபவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதன்படி, மேலதிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம், உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகள் பாதிப்படைவதால், பக்கவாதம் போன்ற உடல்நலப் பிரச்சினைகளை எதிர்நோக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே போதிய அளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுப்பது, கடுமையான வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்கு. பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ சில இடங்களில் பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை நிலவும்.  

இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.